கோட்டாகோகம சிவில் செயற்பாட்டாளர் சிஐடியால் கைது!

0
124

கோட்டாகோகம ஆர்ப்பாட்டத்தில் முன் நின்று செயற்பட்ட சிவில் செயற்பாட்டாளரான பெத்தும் கர்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்திப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையதாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெத்தும் கர்னர் விசாரணைக்களுக்காக அழைக்கப்பட்டிருந்த பெத்தும் கர்னர் இன்றைய தினம் முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.