சகல தனிநபர்களும் அமைதியான போராட்டங்களில் ஈடுபட அனுமதி – ஜனாதிபதி

0
116

நாட்டில் அமைப்பு மாற்றம் தேவை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கு அமைவாக சகல தனிநபர்களும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கும் அதே உரிமை உண்டு எனவும் தெரிவித்தார்.

இளைஞர்களின் கோரிக்கையை ஏற்ற ரணில்! | Ranil To Accept The Request Of The Youth

ஜனாதிபதி விக்கிரமசிங்க நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் ஊழியர்களுக்கு உரையாற்றினார்.

இதன்போது சவாலான காலக்கட்டத்தில் தான் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு முன்னேறுவதற்கு இதுவரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.