கனடாவில் பழங்குடியினரிடம் மன்னிப்பு கோரிய போப் ஆண்டவர்

0
145
Pope Francis prays in front of Indigenous chiefs at the Ermineskin Cree Nation Cemetery in Maskwacis, Albera, during his papal visit across Canada on Monday, July 25, 2022. (Nathan Denette/The Canadian Press via AP)

கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர் அங்கிருக்கும் பழங்குடியினர் துன்புறுத்தலுக்கு மன்னிப்பு கோரினார்.

கனடாவில் 1900 ஆம் ஆண்டு முதல் 1970 வரையிலான வரையிலான காலக்கட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிகளில் தங்கி கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனர். 

இவ்வாறு தேவாலய பள்ளிகளில் படித்த பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் தற்போதைய அரசு இதை ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்பும் கோரியது.

இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் 6 நாள் பயணமாக கனடா சென்றுள்ளார்.

தனது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் (25-07-2022) அல்பெர்டா மாகாணத்தின் தலைநகர் எட்மான்டனில் 19-ம் நூற்றாண்டில் தேவாலய பள்ளிக்கூடமாக இருந்த மிகவும் பாழடைந்த கட்டிடத்துக்கு சென்று அங்கு கூடியிருந்த பழங்குடியின மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

அப்போது 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பழங்குடியின மாணவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.