கோட்டாபயவின் விசா மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் நீடிப்பு!

0
597

இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயண அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு தப்பி ஓடியிருந்தார்.

ஜூலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சவுதி விமானத்தில் சாங்கி விமான நிலையத்திற்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வந்த சிறிது நேரத்திலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் 15 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தால் உத்தியோகப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.

கோட்டாபயவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய சிங்கப்பூர்! | Gotabaya Made Singapore Happy

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட புதிய விசா அடுத்த மாதம் 11ஆம் திகதியுடன் காலாவதியாகும் என சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு பொதுவாக 30 நாட்களுக்கு பயண அனுமதி வழங்கப்படும் என சிங்கப்பூர் ஐ.சி.ஏ. ஆணைக்குழு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.