கொரோனா எந்த நாட்டில் உருவானது? விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு

0
553

உலக அளவில் மில்லியன் கணக்கான உயிர்களை காவு கொண்ட கொரோனா அல்லது கோவிட் 19 வைரஸ் தொற்று சீனாவின் உணவு சந்தையொன்றின் ஊடாக பரவி இருக்கலாம் என புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹுஅனான் உணவு சந்தையில் கோவிட் 19 வைரஸ் தொற்று முதன்முதலாக பரவியதுக்கான ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் அட்வான்ஸ் ஆஃப் சைன்ஸ் என்ற அமைப்பினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹுஆனன் கடல் உணவு வகைகளை மொத்த விற்பனை செய்யும் பாரிய சந்தையில் முதன் முதலாக இந்த வைரஸ் தொற்றுடைய விலங்கினங்கள் இருந்திருக்கலாமென ஆய்வாளர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

 சீன உணவுச் சந்தையில் நரிகள் நாய்கள் போன்ற பல்வேறு மிருகங்கள் விற்பனை செய்து செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் இந்த இந்த வைரஸ் தொற்று பரவுகை ஆரம்பமானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவிட் 19 பெருந்தொற்று மருத்துவ கூட ஆய்வுகளின் போது ஏற்பட்ட ஒரு விபத்தினால் உருவாகி இருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டிருந்தது.

கொரோனா எந்த நாட்டில்  உருவானது?; விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு | Coronavirus Studies Suggest Covid1

இதுவரையில் குறித்த நோய் தொற்று பரவுகைக்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பல்வேறு நாடுகள் சீனா மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில் சீன அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றது.

எவ்வாறறெனினும் வைரஸ் தொற்று உருவானமை தொடர்பான துல்லியமான ஆதாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.