பாரிஸ் விமான நிலையத்தில் ஊழியரின் நகைச்சுவையால் 550,000 யூரோ இழப்பு!

0
694

பிரான்ஸ் – பாரிஸ் விமானத்திலுள்ள விமானம் ஒன்றில் பயங்கரவாதி ஒருவர் இருப்பதாக சிறுமி ஒருவரிடம் விளையாட்டாக கூறிய விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ள் – து – கோல் விமான நிலைய ஊழியர் அதை வேடிக்கையாக கூறியமையினால் புறப்படவிருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது. விமானத் துறையில் இனி பாதுகாப்பு தொடர்பான நகைச்சுவைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி சார்ள் – து – கோல் விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்து பயணிக்கவிருந்த விமானம் ஒன்று திடீரென இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த விமான நிலைய ஊழியர் சிறுமியிடம் கவனமாக இருங்கள் விமானத்தில் தீவிரவாதி ஒருவர் இருப்பதாக பயத்தை ஏற்படுத்தும் வகையில் கூறியுள்ளார்.

சம்பவத்தை அவதானித்த விமான அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீவிரவாதிகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணம் என கூறி விமானம் இரத்து செய்யபட்டுள்ளது.

விமானம் ரத்து செய்யப்பட்டதால் 550,000 யூரோ செலவு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர் 46 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மீதான விசாரணைகளின் பின்னர் அவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது 18000 யூரோ அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.