காலிமுகத்திடல் கூடாரங்களை அகற்றுமாறு எச்சரிக்கை; மீண்டும் பரபரப்பில் கொழும்பு!

0
192

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

கடந்த 20ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில். இன்று காலை குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் உள்ள போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இன்றைய தினம் பகல் ஒரு மணிக்குள் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுள்ளனர்.

அத்துடன் நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்காரணமாக அங்கு குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் கூறுகின்றன.