சஜித்தின் தேசிய சபை இன்று ஆரம்பம்!

0
166

மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் யோசனைகள் அடங்கிய ‘தேசிய சபை’ இன்று கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கமைய இந்த ‘தேசிய சபை’ உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இதற்கான நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

இதில் பல சங்கங்கள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் என்பன இணையவுள்ளன.

இதன்படி தேசிய சபைக்கு கிடைக்கப்பெறும் முற்போக்கு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்க எதிர்கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.