முகப்புத்தகத்தால் கைதான இளைஞன்!

0
233

28 வயதான இளைஞன் ஒருவன் சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய குற்றத்தினால் காலி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இவர் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தென் மாகாண கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு அவசர கால சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட இச் சந்தேக நபர் காலி நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் பொது மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன் பொது அமைதியாய் சீர் குலைக்கும் நோக்கில் முகப்புத்தகத்தில் அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு கருத்து தெரிவித்தவர்களை கைது செய்வதற்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.