இலங்கையில் மீண்டும் கட்டாயமாக்கப்படும் நடைமுறை..!

0
94
Doctor with blood sample of Covid-19 Omicron B.1.1.529 Variant and general data of covid-19 Coronavirus Mutations.

நாட்டில் முகக் கவசங்களை அணிய வேண்டியது மீண்டும் கட்டாயப்படுத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சில் விசேட பேச்சுவார்த்தை

கோவிட் பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசங்களை கட்டாயமாக்குவது குறித்து இன்று சுகாதார அமைச்சில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நிபுணத்துவ மருத்துவர்களின் பங்களிப்புடன் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அரசாங்கத்திடம் கோரிக்கை

ஒமிக்ரோன் திரிபு பரவுகையினால் முகக் கவச பயன்பாட்டை கட்டாயமாக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சில தரப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் பரவுகை குறைவடைந்த காரணத்தினால் முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன கட்டாய முகக் கவச பயன்பாட்டை தளர்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.