வெளிநாட்டுத் தூதர்களை கடுமையாக கண்டித்த ஜனாதிபதி ரணில்!

0
87

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது அதிபர் ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரைக் கொண்டு தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதனையடுத்து மிகுந்த அதிருப்திக்குள்ளான இலங்கை அதிபர் அனைத்து வெளிநாட்டுத் தூதர்களையும் அழைத்து அதிருப்பதியைத் தெரிவித்திருக்கிறார். அங்கு அவர் தூதர்களுக்கு தனது கருத்துக்களை தெளிவுபடுத்தினார்.“போராட்டக்காரர்கள் உங்கள் நாடுகளில் அதிபரின் அலுவலகம் மற்றும் மாளிகைகளைசட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்து கொண்டு, அங்கிருந்து வெளியேற மறுத்தால் உங்கள் அரசுகள் அதை அனுமதிக்குமா? உரிய அதிகாரிகளுடன் உண்மை நிலையை உறுதிப்படுத்தாமல் வெறுமனே சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு என்னை கண்டித்து செய்திகள், தகவல்கள் வெளியிடுவது எப்படி சரியாகும்?

“நீங்களாக சமூக ஊடகங்களை மட்டுமே நம்பி செய்திகளை, குறிப்புக்களை, அறிக்கைகளை வெளியிடுகின்றீர்கள். உரிய அதிகாரிகளோடு பிரச்சினைகளை உறுதிப்படுத்தாமல் நீங்கள் வெளியிடும் கருத்துக்களால் இலங்கை பற்றி அனைத்துலக ரீதியில் தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டுள்ளன,” என்று தனது அதிருப்பதியை வெளியிட்டுள்ளார்.

ஆனால் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே போராட்டக்காரர்களின் போது தாக்குதல் நடத்தியபோது அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை டுவிட்டரில் அப்போது வெளியிட்டிருந்தார். தற்பொழுது அந்த டுவிட் சமூக ஊடங்களில் பரப்பப்பட்டுவருகின்றது.