எரிபொருள் வரிசையில் காத்திருந்த யானை!

0
62

நாட்டில் எரிபொருளுக்கான வரிசை தினமும் குறைவின்றி நாடு முழுவதும் காணப்படும் நிலையில், யானையொன்று எரிபொருளுக்காக காத்திருந்த சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது.

கதிர்காமத்தில் நடைபெறவுள்ள பெரஹெர உற்சவத்தில் கலந்துகொள்ளவுள்ள மியன் ராஜாவை ஏற்றிய லொறியே வரிசையில் காத்திருந்தது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கதிர்காமத்தை நோக்கி புறப்படுவதற்கு முன்னர் யானையுடன் லொறி எரிபொருள் வரிசைக்குள் நுழைந்தது.

இதன்போது கண்டி- கட்டுகஸ்தோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது வாய்ப்பு வரும் வரை யானையும் லொறியில் காத்திருந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது