இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாலியலில் ஈடுபடும் பெண்கள்

0
1002

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் 30 சத வீதம் வரை அதிகரித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலால் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய ஆடை விற்பனை நிலையம் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதனால் அங்கு வேலை செய்து வந்த பெண்கள் வேறு வழியின்றி பாலியல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

அத்தோடு பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் “இந்த நெருக்கடி நிலையால் எங்களுக்கு வேலை போகும் அபாயம் உள்ளது. இப்போது பாலியல் தொழிலைத் தவிர வேறு எந்த வழியும் எங்களுக்கு இல்லை. இதுவரை நாங்கள் மாதம் 28,000 ரூபாய் சம்பாதித்து வந்தோம். அதிக நேரம் வேலை பார்த்தாலும் 35,000 ரூபாய்க்கு மேல் எங்களால் சம்பாதிக்க முடியாது. ஆனால் பாலியல் தொழிலில் எங்களால் ஒரு நாளில் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது” என கூறியுள்ளார்.

இதுகுறித்து பாலியல் தொழிலாளர் முன்னணி அமைப்பின் வழக்கறிஞர் குழுவின் நிர்வாக இயக்குநர் அஷிலா தண்டெனியா “பெண்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் கூட உதவி செய்ய முடியாத சூழல் தான் இங்கு இருக்கிறது. சீக்கிரம் பணம் சம்பாதிக்க அவர்களுக்கு இதை விட வேறு தொழில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

Ashila Dandenia