மலை உச்சியில் இருந்து விழுந்த எஜமானரை மீட்க உதவிய நாய்!

0
477

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் நிவேடா பகுதியில் மலை ஏறிக் கொண்டிருந்த எஜமானர் சுமார் 70 அடி கீழே விழுந்த போது மதிநுட்பமாக செயற்பட்ட அவரது செல்லப் பிராணியான நாய் அவரை மீட்டுள்ளது.

53 வயதான நபர் ஒருவரே இவ்வாறு மலை உச்சியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இந்த நபர் கீழே வீழ்ந்த போது அந்தப் பகுதியில் நெட்வொர்க் இல்லாத காரணத்தினால் அவரினால் உதவி கோர முடியவில்லை.

கீழே விழுந்த காரணத்தினால் அவரது இடுப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

நெட்வொர்க் காணப்படும் ஒர் இடத்திற்கு வந்து மீட்புப் பணியாளர்களுக்கு அறிவிப்பதற்கு அவருக்கு அடுத்த நாள் வரையில் காத்திருக்க நேரிட்டது.

மலை உச்சியிலிருந்து வீழ்ந்த எஜமானரை மீட்ட செல்லப்பிராணி | This Dog Led Rescuers To His Owner

தகவல் அறிந்த மீட்புப் பணியாளர்கள் 25 பேர் குறித்த பகுதி நோக்கி பயணம் செய்தனர். குறித்த நபரின் செல்லப் பிராணியான சாவுல் என்ற நாய் மீட்புப் பணியாளர்கள் கண்டு தனது எஜமானர் காயமடைந்திருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்து வந்துள்ளது.

இந்த சம்பவத்தை பார்த்த போது நம்ப முடியவில்லை எனவும் முதலில் இது ஓர் திரைப்படம் போன்றே தெரிந்தது எனவும் நிவேடா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மீட்புப் பணியாளர்கள் சம்பவத்தை விபரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நாயின் மதிநுட்பமான செயல் காரணமாக எஜமானரை விரைவில் தேடிக் கண்டு பிடித்து முதலுதவி வழங்கி காப்பாற்ற முடிந்தது என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.