உலகின் மிக மோசமான விமான நிலையம் அமைந்துள்ள நாடு?

0
223

உலகின் மிக மோசமான விமானப் பயண கால தாமதங்களைக் கொண்ட விமான நிலையமாக கனடாவின் பியர்சன் விமான நிலையம் பெயரிடப்பட்டுள்ளது.

கோடை கால வெப்பநிலை, பணியாளர் பிரச்சினை போன்ற காரணிகளினால் உலகின் பல முக்கியமான விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் பயணங்களை ரத்து செய்வதுடன் கால தாமதங்களும் வெகுவாக பாதிவாகின்றது.

சீ.என்.என் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் கடந்த மே மாதம் 26ம் திகதி முதல் ஜூலை மாதம் 19ம் திகதி வரையில் சுமார் அரைவாசிக்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் காலம் தாமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த விமானப் பயணங்களில் 52.5 வீதமானவை இவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.

உலக அளவில் விமானப் பயணங்களை ரத்து செய்த விமான நிலையங்களின் பட்டியலிலும் பியர்சன் விமான நிலையம் 4ம் இடத்தை வகிக்கின்றது.

இந்த கோடை காலத்தில் அதிகளவு விமானப் பயணங்கள் தாமதிக்கப்பட்ட விமான நிலையங்களின் வரிசையில் கனடாவின் பியர்சன் விமான நிலையம் முதலாம் இடத்தையும், ஜெர்மனியின் பிராங்புருட் விமான நிலையம் இரண்டாம் இடத்தையும், பிரான்ஸின் பாரிஸ் சார்ளஸ் டி காவுலா விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.