அமெரிக்க பீரங்கிகளை வெடிக்கச் செய்தோம்; கர்ஜிக்கும் ரஷ்யா!

0
150

உக்ரேனில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 4 ஹைமார்ஸ் பீரங்கிகளைத் தகர்த்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில் உக்ரேனும் அமெரிக்காவும் அந்தத் தகவலை மறுத்துள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் அந்த அமெரிக்கப் பீரங்கிகளைத் தாக்கிச் சிதைத்த காட்சிகளை ரஷ்யா வெளியிட்ட நிலையில் அது பொய்யான படம் என உக்ரேன் கூறுகிறது.

அமெரிக்க  பீரங்கிகளை  தகர்த்துவிட்டோம்;  கொக்கரிக்கும் ரஷ்யா! | We Blew Up The American Artillery Roaring Russia

அதுமட்டுமல்லாது உக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுத ஆதரவை மட்டந்தட்டும் நோக்கத்துடன் ரஷ்யா அந்தப் பொய்க் காட்சிகளை வெளியிட்டிருப்பதாக கீவ் (Kyiv) கூறியது. இதற்கிடையே உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் (Donbas) வட்டாரத்தில் போர் தொடருவதாக கூறப்படுகின்றது.

அதேவேளை உக்ரைனின் டொன்பாஸ் வட்டாரத்தில் இருக்கும் இரண்டு

மாநிலங்களில் ஒன்றான லுஹான்ஸ்க் (Luhansk) மாநிலத்தை இம்மாதத் தொடக்கத்தில் ரஷ்யா கைப்பற்றியிருந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.