இழந்த நிலத்தை மீட்காமல் போரை நிறுத்தப்போவதில்லை; உக்ரைன் அதிபர் சூளுரை!

0
121

தாம் இழந்த நிலத்தை மீட்காமல் போர் ஓயப்போவதில்லை என உக்ரேனிய அதிபர் (Volodymyr Zelenskyy) சூளுரைத்திருக்கிறார்.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அர்த்தமற்ற சண்டைநிறுத்தத்தால் போர் நீடிக்கவே செய்யும் எனவும் கூறினார்.

Wall Street Journal நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் உக்ரைன் அதிபர் இதனை கூறியுள்ளார்.

முதலில் பறிகொடுத்த நிலப் பகுதிகளை மீட்க வேண்டும் என கூறிய அதிபர் ஸெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதற்குப்பிறகுதான் சுமுகமான பேச்சுவார்த்தை பற்றி யோசிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இழந்த நிலத்தை மீட்காமல்   போரை நிறுத்தப்போவதில்லை;  உக்ரைன் அதிபர் சூளுரை! | War Will Not Stop President Of Ukraine Speech

அதேவேளை கைப்பற்றிய வட்டாரங்கள் ரஷ்யாவிடமே இருந்தால் மாஸ்கோவுக்கு ஆயுதங்களைச் சேகரிக்கவும் அடுத்த கட்ட போருக்குத் தயாராகவும் வாய்ப்புக் கொடுப்பதாக அது அமைந்துவிடும் என்றும் அவர் (Volodymyr Zelenskyy) சுட்டிக்காட்டினார்.

அதேவேளை உக்ரேனுக்கு மேலும் சுமார் 270 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கும் குறிப்பில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.