ரணிலின் வெற்றியை உற்சாக பானத்தோடு கொண்டாடிய நாமல்!

0
146

ரணிலின் வெற்றிக்காக அதிகாலை 3 மணி வரை நாமல் ராஜபக்க்ஷவின் வீட்டில் உற்சாக பானத்தோடு பார்ட்டி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அன்றைய தினம் இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் மாபெரும் இராப்போசன விருந்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு அந்த விருந்தில் டலஸை ஆதரிப்பதாக சொன்ன தொலவத்தவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக பொஹொட்டுவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்த நிலையில் அவர்களும் இரவு விருந்தில் கலந்துகொண்டதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ரணிலின் வெற்றியை விடியவிடிய உற்சாக பானத்தோடு கொண்டாடிய நாமல்! | Naamal Celebrated Ranil S Victory

அதன்படி 137 எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த விருந்தில் சுவையான உணவுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.