அடுத்த 15 நாட்களுக்குள் முக்கிய முடிவு; ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!

0
75

 அடுத்த பதினைந்து நாட்களுக்குள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி முப்பது அமைச்சரவை அமைச்சர்களையும் முப்பது இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்துக் கட்சி ஆட்சியை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதேவேளை நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட 18 அமைச்சர்களுக்கு மேலதிகமாக மேலும் பன்னிரண்டு அமைச்சர்கள் இதன்படி நியமிக்கப்படவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவொன்றும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் கட்சித் தலைவர்களான ரிஷாத் பதுர்தீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நிதியமைச்சர் பதவியை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.