அமெரிக்காவில் முதல் தடவை குழந்தைகளிடம் குரங்கம்மை அடையாளம்!

0
109

அமெரிக்காவில் முதல்முறையாகச் குழந்தைகளிடம் குரங்கம்மை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கலிபோர்னியாவில் ஓர் அமெரிக்கக் குழந்தைக்குக் குரங்கம்மை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்கக் குடியிருப்பாளர் அல்லாத மற்றொரு குழந்தைக்கும் குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை அல்ல என்று அமெரிக்க கிருமித் தொற்றுக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

இந்நிலையில் வீட்டில் மற்றவர்களுக்குக் குரங்கம்மை இருந்து அதன் மூலம் குழந்தைக்குப் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எனினும் பாதிக்கபட்ட இரண்டு குழந்தைகளுமே நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் குரங்கம்மைக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கிருமித் தொற்றுக் கட்டுப்பாடு நிலையம் கூறியது.

அதேவேளை மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இருந்த குரங்கம்மை நோய் அண்மையில் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.