ஜப்பான் மீது கடும் கோபத்தில் சீனா!

0
369

ஜப்பான் வெளியிட்டுள்ள புதிய தற்காப்பு வெள்ளை அறிக்கைக்குச் சீனா அதன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

உக்ரேன் – ரஷ்ய போர் விளைவுகள், தைவான் மீதான சீனாவின் மிரட்டல், எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ள தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் போன்ற தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக ஜப்பான் அதன் வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.

இந்நிலையில் ஜப்பானின் இந்தப் புதிய வெள்ளை அறிக்கை சீனா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாகப் குறிப்பிட்டது.

ஜப்பான் மீது கடும் கோபத்தில் சீனா! | China Is Very Angry With Japan

அதேவேளை சீனாவின் தற்காப்புக் கொள்கை, சந்தைப் பொருளியல் வளர்ச்சி, சட்டப்பூர்வமான கடல்துறை சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றை ஜப்பான் சாடுவதாகவும் பெய்ச்சிங் கூறியது.

அத்துடன் சீனாவின் மிரட்டல் என்று சொல்லப்படும் அம்சத்தை ஜப்பானின் வெள்ளை அறிக்கை தேவையில்லாமல் பெரிதுபடுத்துவதாகச் சீன வெளியுறவு அமைச்சு கூறியது.

மேலும் தைவானைப் பற்றிப் பேசுவதன் மூலம் சீனாவின் உள்விவகாரத்தில் ஜப்பான் தலையிடுவதாகவும் சீனா குற்றம் சுமத்தியுள்ளது.