இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

0
465

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 153,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. தேவேளை ஜூலை 21ஆம் திகதி 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Change In The Price Of Gold In Sri Lanka

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும் தங்கம் மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது.

தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க இலாபம் கிடைத்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் மீதான மக்கலின் ஆர்வர் அதிகரித்து வருகின்றது.