ஜூலை மாதத்தில் 28,733 சுற்றுலாப் பயணிகள் வருகை

0
98

இவ்வாண்டில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28,733 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 440,110 ஆகும். குறித்த தரவுகள் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த ஆனால் நிலையானதாக இருப்பதைக் காட்டுகிறதாக குறிப்பிடப்படுள்ளது.

ஜூலை மாதத்தில்   28,000 சுற்றுலா பயணிகள் வருகை | 28000 Tourist Arrivals In July

மேலும், நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்கள் இருந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை மீதான ஆர்வம் உள்ளமையை இந்த தரவுகள் காட்டுகின்றன.