படையினரால் கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எங்கே?

0
168

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து செய்தியறிக்கையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ள அதேவேளை கைதுசெய்யப்பட்ட இரு பத்திரிகையாளர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின்றன.

கொள்ளுப்பிட்டி கிரஸ்காட் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சத்துரங்க பிரதீப் குமார கசுன் குமாரகே இருவரையும் இன்னமும் படையினர் பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை என செய்திகள் வெளியாகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிபிசி செய்தியாளர்கள் ஜெரைன் சாமுவேல் ரசிக குணவர்த்தன சட்டத்தரணிகள் என பலர் தாக்கப்பட்டுள்ளனர்.