9 வயதில் ராணுவ வீரராக விரும்பும் உக்ரைன் அதிபரின் மகன்!

0
480

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் தனது 9 வயது மகன் இராணுவ வீரராக விரும்புவதாக ஜனாதிபதியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

9 வயதிலேயே ராணுவ வீரராக விரும்பும் உக்ரைன் ஜனாதிபதியின் மகன்! | President Of Ukraine Son Wants To Be A Soldier

இதனை ஒலெனா ஜெலன்ஸ்கி போட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 5 மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்த தருணத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

9 வயதிலேயே ராணுவ வீரராக விரும்பும் உக்ரைன் ஜனாதிபதியின் மகன்! | President Of Ukraine Son Wants To Be A Soldier

உக்ரைன் போருக்கு கூடுதலான ஆயுதங்கள் வேண்டும் என்று கேட்டார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் ஒரு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

9 வயதிலேயே ராணுவ வீரராக விரும்பும் உக்ரைன் ஜனாதிபதியின் மகன்! | President Of Ukraine Son Wants To Be A Soldier

என் 9 வயது மகன் நாட்டுப்புற கலைக்குழுவுக்கு செல்வான். அவன் பியானோ வாசித்து வந்தான். ஆங்கிலம் கற்றும் வந்தான். ஆனால் ரஷ்ய போருக்கு பின்னர் அவன் ராணுவ வீரர் ஆக விரும்புகிறான்.

அவனை என்னால் திரும்பவும் கலை மற்றும் மனிதநேயத்துக்கு கொண்டு வர முடியாது. என் மகனின் குழந்தைப்பருவம் அவனுக்கு திரும்பக் கிடைக்க வேண்டும். அவன் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.