காலிமுகத்திடல் போராட்டம் மீது அடக்குமுறை : சுவிற்சர்லாந்து கண்டனம்

0
145

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுவிற்சர்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர்தெரிவிக்கையில்,

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமை முக்கியமானது.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும். இலங்கைக்கு பரஸ்பர மரியாதையும் ஒத்துழைப்பும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.