ஜனாதிபதியானதும் ஆட்டத்தை தொடங்கிய ரணில்!

0
174

நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றார்.

இதன்படி, இலங்கையின் 8 வது ஜானதிபதியாக நேற்றைய தினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதனையடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு முன் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கோட்டா கோ கம வில் இருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றி ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க வைத்தார் இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் நள்ளிரவு ஜனாதிபதி ரணில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.  

Gallery
Gallery