ஒன்றரை இலட்சம் மக்கள் இலங்கையை விட்டு வெளியேற்றம்!

0
422

இலங்கையிலிருந்து கடந்த (2022) ஜனவரியில் முதல் ஒன்றரை இலட்சம் பேர் வரை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதில் ஒரு இலட்சத்து 767 பேர் தனித்தும் 55 ஆயிரத்து 411 பேர் பணியகத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இந்திய செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

  • கட்டாருக்கு 39ஆயிரத்து 216 பேரும் சவூதிக்கு 3219பேரும் தென்கொாியாவுக்கு 2576பேரும் சென்றுள்ளனர்.
  • 46ஆயிரத்து 992 பேர் தொழில் நிபுணத்துவத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
  • 49ஆயிரத்து 923 பேர் தொழில்களுக்காக சென்றுள்ளனர்.
  • 38ஆயிரத்து 871 பேர் வீட்டுப்பணியாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை இலங்கையின் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள போதும் இலங்கை மக்களின் எதிர்காலம் இன்னும் நிலையற்றதாகவே உள்ளதாக இந்திய செய்திச்சேவை ஒன்று அறிக்கையிட்டுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறிய ஒன்றரை இலட்சம் பேர்! | One And A Half Million People Left Sri Lanka

இதன் காரணமாகவே இலங்கையர்கள் பலரும் நாள்தோறும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் மற்றும் பழைய கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்திச்சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.