வவுனியாவில் சிறுவன் ஒருவன் மாயம்!

0
61

வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் என்ற பதினைந்து வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமுற்ற சிறுவனின் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தந்தையான ஜசோதரனின் 077 559 9709 தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.