க்யூ.ஆர் முறைமைக்கு 30 லட்சம் வாகனங்கள் பதிவு!

0
130

கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கிறது.

நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் கியூ. ஆர் தேசிய எரிபொருள் அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தின் ஊடாக மாத்திரம் கியூ.ஆர் முறையில் பதிவு செய்யுமாறும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப திணைக்களம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு! | 30 Lakh Vehicles Registered For Qr System

மேலும், தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் அது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.