யாழில் பிரசவ வலியால் துடித்த பெண்: பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு

0
249

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பிரசவ வலியினால் துடித்த வேளை வட்டுக்கோட்டை பொலிஸார் தமது பொலிஸ் வாகனத்தை கொடுத்து அந்தப் பெண்ணிற்கு உதவி செய்த சம்பவம் பாரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (20-07-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டவேளை அவரை முச்சக்கர வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்தவேளை திடீரென முச்சக்கர வண்டியில் இருந்த பெற்றோல் தீர்ந்து போனது.

இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன் முச்சக்கர வண்டிக்கு பெற்றோல் வழங்கினர். இருந்தாலும் முச்சக்கர வண்டியானது இயங்க மறுத்தது.

இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக பொலிஸாருக்கு சொந்தமான வாகனத்தினை வழங்கி குறித்த கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு வழி செய்தார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் இந்த நெகிழ்ச்சிகரமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.