ரஷ்ய அதிபரை கோமாளியாக்கிய சுவிஸ் பத்திரிகை!

0
97

சுவிஸ் பத்திரிகை ஒன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) கோமாளியாக சித்தரித்து படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதனால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்ய தரப்பு அந்த பத்திரிகைக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அச்சுறுத்தியுள்ளது.

சுவிஸ் தினசரியான Neue Zürcher Zeitung சமீபத்தில் சூப்பர் ஹீரோக்களும் வில்லன்களும் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் சூப்பர் ஹீரோவாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) நிற்க அருகில் சர்க்கஸ் கோமாளி போன்ற தோற்றத்தில் புடின் (Vladimir Putin) இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்திலுள்ள ரஷ்ய தூதரகம் அந்த சுவிஸ் பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், அந்த படம் ஏற்கனவே ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு படம் தான் என சம்பந்தப்பட்ட பத்திரிகை தெரிவித்துள்ளது.