போரிட்டு வீடு திரும்பிய தாயைக் கண்ட குழந்தை கட்டியணைத்த வீடியோ!

0
538

ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு வீடு திரும்பிய உக்ரைன் வீராங்கனையை அவரது மகன் கட்டியணைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உக்ரைனில் நான்கு மாதங்களுக்கு மேலாக போர் நீட்டித்து வரும் நிலையில் போருக்கு மத்தியில் வீராங்கனை ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டின் வாசலில் காத்திருந்த அந்த குழந்தை தனது தாயைக் கண்டதும் பேரானந்தம் அடைந்து, அவரைக் கட்டியணைத்துக் கொள்ள உணர்ச்சிவசப்பட்ட அப்பெண்ணும் கண் கலங்கினார்.

உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.