புதிய ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பு

0
110

இலங்கையின் 08 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை சுபநேரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் புதிய ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இதற்கான விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவானார். தான் பாராளுமன்ற வளாகத்தினுள் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள விரும்புவதாக நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் புதிய ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதற்கமைய சத்திய பிரமாணத்துக்கான விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்ய இருப்பதோடு இந்த நிகழ்வில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர்.