தனது வாழ்நாள் கனவை வென்ற ஜனாதிபதி ரணில்!

0
61

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அதன்படி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகளும் டல்ஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் அனுர குமார திஸாநாயக்காவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன.

இதனை அடுத்து நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.