சர்வதேச ஊடகவியலாளர் மீது கோபடைந்த ரணில் – ஜனாதிபதியானதும் நடந்த வாக்குவாதம்

0
628

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்த போது சர்வதேச ஊடகவியலாளரிடம் கடும் தொணியில் பதிலளித்துள்ளார்.

விகாரைக்கான விஜயம்  தனிப்பட்ட ரீதியாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச ஊடகவியலாளர் நேர்காணல்

அங்கு பிரித்தானிய Sky நியூஸ் ஊடகவியலாளர் ஜனாதிபதியிடம், இந்நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் எனவும், பழைய ராஜபக்ச ஆதரவாளரான நீங்கள் எப்படி அந்த மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்தவர், “நான் எப்படி ராஜபக்ஷக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்கு தெரிந்த காலத்திலிருந்தே நான் அவர்களுக்கு எதிரானவர். இன்று வெளிநாட்டில் இருந்து வந்து ராஜபக்ஷ ஆதரவாளரா என்று கேட்கிறீர்கள். இங்கு யாரிடம் கேட்டாலும் அவர்கள் ராஜபக்ஷவின் நண்பர்கள் தான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்பார்க்கும் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவீர்கள் என அந்த ஊடகவியலாளலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோபமாக பதிலளித்த ரணில்

சர்வதேச ஊடகவியலாளரிடம் கோபடைந்த ரணில்  - ஜனாதிபதியானதும் நடந்த வாக்குவாதம் | Who Is The8th President Of Sri Lanka

இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு பத்திரிக்கையாளராக நீங்கள் ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட வேண்டும், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள். அப்படி என்றால் நீங்கள் ராஜபக்சக்களின் நண்பன் இல்லையா? என அந்த ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன். இன்னொன்றையும் கூறுகிறேன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் நான் இதற்கு முன்னரும் இணைந்து செயற்பட்டுள்ளேன். ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனது வாக்குகளை அவருக்கு பயன்படுத்தியதில்லை.

நான் ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்படுவதால் நான் அவருடைய நண்பன் என்று அர்த்தமல்ல. இதன் மூலம் எனக்கு கிடைத்த வாய்ப்புகள் மற்றும் எனது கட்சியை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்கிறேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.