உடனே போய்விடு; சிங்கப்பூரில் கோட்டாபயவிற்கு  அழுத்தம்!

0
124

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிங்கப்பூர் அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை 15 நாட்களுக்கு மட்டுமே நாட்டில் தங்க அனுமதித்துள்ளது.

இந்நிலையில் வழங்கபட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ராஜபக்ஷவுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதோடு விசா காலம் நீடிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

உடனடியாக சென்றுவிடுங்கள்; சிங்கப்பூரில் கோட்டாவிற்கு அழுத்தம்! | Leave Immediately Quota Pressure In Singapore

செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பினால் கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமானப்படை விமானத்தில் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

இதனையடுத்து கோட்டாபய ராஜபக்சவையும் ஏனையோரையும் நாட்டை விட்டு அனுப்புமாறு மாலைத்தீவு அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சவூதி விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.

அதேவேளை அமெரிக்க அரசாங்கமும் கோட்டாபய ராஜபக்சவுக்கு விசா வழங்க மறுத்துள்ளது.