பெண்களின் வேலைக்கு ஆண் உறவினரை அனுப்ப அழைப்பு

0
123

ஆப்கான் நிதி அமைச்சில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அவர்களுக்கு பதிலாக வேலைக்கு ஆண் ஊறவினர்களை அனுப்பும்படி தலிபான் நிர்வாகம் கேட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தது தொடக்கம், அரச பதவிகளில் இருக்கும் பெண்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதோடு, எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் அவர்களுக்கு சம்பளம் கடுமையாகக் குறைக்கப்பட்டே வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருப்பதால் ஆண் உறவினர் ஒருவரை வேலைக்கு அனுப்பும்படி தலிபான் அதிகாரிகள் அழைப்பு விடுத்ததாக பல பெண்களும், கார்டியன் நாளிதழுக்கு குறிப்பிட்டுள்ளனர்.

நிதி அமைச்சில் 15 ஆண்டுகளாக பணியாற்றும் 37 வயதான மரியம் என்பவருக்கு இவ்வாறான அழைப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார். “அமைச்சில் எனது பதவிக்காக ஆண் உறவினர் ஒருவரின் பெயரைத் தரும்படி அவர்கள் கேட்கிறார்கள். அப்போது என்னை பணி நீக்கம் செய்ய முடியும்” என்றார்.

வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டம் பெற்ற தமது இடத்துக்கு மற்றொருவரை இலகுவாக எப்படி பரிந்துரைக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.