புதிய ஜனாதிபதியுடன் கைகோர்க்க தயாராகும் அமெரிக்கா!

0
117

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவாலான காலங்களில் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.