றொரன்டோவில் முழு வகுப்பு மாணவர்களுக்கும் புது பாதணிகளை பரிசளித்த ஆசிரியை

0
112

றொரன்டோவில் ஒட்டுமொத்த வகுப்பு மாணவர்களுக்கும் புதிய பாதணிகளை ஆசிரியை ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த கல்வியாண்டில் மாணவர்கள் அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியதனால் இவ்வாறு ஆசிரியை அனைத்து மாணவர்களுக்கும் தரமான பாதணிகளை பரிசாக வழங்கியுள்ளார்.

அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் புது பாதணிகளுடன் வகுப்புக்கு வருவார்கள். ஸ்டெப்னி என்னும் பெயரை உடைய ஆசிரியையே இவ்வாறு ஒட்டு மொத்த வகுப்பிற்கும் பாதணிகளை பரிசளித்து மாணவர்களை மகிழச்சியில் மிதக்கச் செய்துள்ளார்.

இந்த பாதணிகள் விசேடமாக வடிவமைக்கப்பட்டவை எனவும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை பாதணியில் பொறித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆசிரியை பாதணிகளை மாணவர்களுக்கு வழங்கிய காணொளி தற்பொழுது வைரலாகி வருகின்றது.

மாணவர்கள் மகிழச்சியில் இருக்க வேண்டுமென்பதே தமது நோக்கம் என ஆசிரியை ஸ்டெப்னி தெரிவித்துள்ளார்.

மொத்த வகுப்பு மாணவர்களுக்கும் புது பாதணிகளை பரிசளித்த ஆசிரியை; ஏன் தெரியுமா? | Teacher Gifts Entire Class Brand New Sneakers

குறித்த ஆசிரியையின் வகுப்பில் உக்ரைன், நைஜீரியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் ஏதிலிச் சிறுவர்களும் கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆசிரியை வகுப்பில் கற்ற 22 மாணவர்களுக்கும் sneakers ரக பாதணிகளை பரிசாக வழங்கியுள்ளார். மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த பாதணிகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.