புதிய ஜனாதிபதி தெரிவு அரசியலுக்கு தீர்வு; ஹாபிஸ் நஸீர் அஹமட் வாழ்த்து

0
114

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுபது வீதமானோரின் ஆதரவைப் பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியிருப்பது தாய்நாட்டின் கீர்த்தியை சர்வதேசத்தில் உயர்த்தியிருப்பதாக சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவானமை தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,

நாட்டிற்கு தேவையான நேரத்தில் தகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். மக்கள் பிரதிநிதிகளில் அறுபது வீதமானோர் புதிய ஜனாதிபதியை ஆதரித்துள்ளனர்.

பல இனங்களையும் பெரும்பாலான கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுதத்தும்ம் எம்பிக்களது ஆதரவும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். படுகுழிக்குச் சென்றுள்ள நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்த சர்வதேசத்தின் உதவிகளே தேவைப்படுகிறது.

இந்த நேரத்தில் ரணிலை ஜனாதிபதியாக நாடாளுமன்றம் தெரிந்திருப்பது மிகத் தீர்க்கதரிசினமிக்க செயலெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேசத்தில் புதிய ஜனாதிபதிக்குள்ள கீர்த்தியாலும் ஜனநாயகத்தில் ரணில் வைத்துள்ள நம்பிக்கையாலும் இந்த உதவிகளைப் பெறமுடியும்.

புதிய ஜனாதிபதியின் தெரிவு  அரசியலுக்கான தீர்வு ; ஹாபிஸ் நசீர் அஹமட்  வாழ்த்து | The Election New President Solution To Politics

இனவாதிகள் மற்றும் அடக்கு முறையாளர்களின் முகாம்களுக்குள் சிறுபான்மை கட்சிகள் முடங்கியதன் நோக்கம் எங்களுக்குத் தெரியாத விடயமுமில்லை என தெரிவித்த சுற்றாடல்துறை அமைச்சர் இந்தக் கூட்டத்தை தோற்கடித்து அதிகாரத்துக்கு அலைவோருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் மக்களின் பட்டினியைப் போக்குவது பற்றிச் சிந்திக்காமல் பழிவாங்கும் மனநிலையில் உள்ள தலைவர்களை மக்கள் அடையாளம் காணவேண்டும் என்றும் ஹாபிஸ் நஸீர் அஹமட் எம்பி தெரிவித்துள்ளார்.