ரணிலுக்கு கடிதம் அனுப்பிய விக்னேஸ்வரன்! திடீர் பல்டி

0
513

தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை நேற்றைய தினம் (19-07-2022) செவ்வாய்க்கிழமை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கையளித்துள்ளேன்.

அவரின் உறுதிமொழிக்கமைய நடுநிலைமை என்ற தனது முடிவு சில வேளைகளில் மாறலாம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு கடிதம் அனுப்பிய எம்.பி விக்னேஸ்வரன்! திடீர் பல்டி | President Candidate C V Vigneswaran Mp Sudden Plan

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் கட்சிகளின் ஆதரவை கோரும் முயற்சிகளில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் நடுநிலையாக செயற்படப்போவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பனருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனினால் ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து பிரதான எதிர்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாச விலகியதால் உங்கள் நடு நிலைமை என்ற முடிவில் மாற்றங்கள் எதாவது உண்டா என அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு கடிதம் அனுப்பிய எம்.பி விக்னேஸ்வரன்! திடீர் பல்டி | President Candidate C V Vigneswaran Mp Sudden Plan

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடித மொன்றை பதில் ஜனாதிபதியும் புதிய ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளோம்.

அது தொடர்பில் அவர் சில உறுதிமொழிகளை வழங்கினார். எனினும் தமது பங்காளிக்கட்சிகளுடனும் ஏனைய தமிழ் கட்சித்தலைவர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளேன். அப்போது சில வேலைகளில் நடு நிலைமை என்ற முடிவு மாற்றமடையலாம்.

ரணிலுக்கு கடிதம் அனுப்பிய எம்.பி விக்னேஸ்வரன்! திடீர் பல்டி | President Candidate C V Vigneswaran Mp Sudden Plan

அதேவேளை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் யாரும் எனது கட்சியின் ஆதரவை கோரவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவே என்னிடம் நேரடியாக ஆதரவு கோரினார்.

அதனாலேயே தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடித மொன்றை அவரிடம் நேரில் கையளித்தேன். அவர் உடனடியாகவே படித்துப்பார்த்து சில உறுதி மொழிகளை வழங்கினார்.

இந்தக் கடிதத்தை எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதசாவிடமும் கையளிக்கவிருந்தேன். ஆனால் அவர் இறுதி நேரத்தில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகி விட்டதால் அவருக்கு கையளிக்கவில்லை என்றார்.