ஈரானில் திருமண நாளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணப்பெண் பலி

0
638

ஈரானில் திருமண நாளிலேயே துப்பாக்கி குண்டு பாய்ந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹ்வாஷ் லேகெய் (Mahvash Leghaei) (24) என்ற அந்த இளம்பெண்ணின் திருமணத்தைக் கொண்டாடுவதற்காக அவரது உறவினர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட அதில் ஒரு குண்டு Leghaeiயின் தலையில் பாய்ந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மஹ்வாஷ் லேகெய் (Mahvash Leghaei) கோமா நிலைக்குச் சென்று பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருமண நாளன்று மணப்பெண் நெற்றியில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! | On The Day Of The Wedding The Bullet Hit Bride

ஃபிருசாபாத் நகரில் நடந்த இந்த துயர சம்பவத்தில் திருமணத்துக்கு வந்திருந்த இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளார்கள்.

திருமண நாளன்றே கொல்லப்பட்ட மஹ்வாஷ் லேகெய் (Mahvash Leghaei) மீது பாய்ந்த குண்டு அவரது உறவினர் ஒருவர் சுட்ட வேட்டைத் துப்பாக்கியிலிருந்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹ்வாஷ் லேகெய் (Mahvash Leghaei) மீது குண்டு பாய்ந்ததும் அந்த உறவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

திருமண நாளன்று மணப்பெண் நெற்றியில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! | On The Day Of The Wedding The Bullet Hit Bride

அந்த 36 வயது நபருக்கு துப்பாக்கியை சரிவர கையாளத் தெரியாததாலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானில் திருமண விழாக்களின்போது இதுபோல் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுடுவது வழக்கமான ஒரு நிகழ்வாக உள்ளது.

ஆனால், அது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.