எரிபொருள் வரிசையில் உயிரிழந்த உப அதிபர்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

0
47

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும் நாட்டு மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு காத்துக்கொண்டிருப்பவர்களில் சிலர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவமும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், எரிபொருள் வரிசையில் மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த உப அதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.