பட வாய்ப்புகள் இல்லாததால் அமெரிக்க நடிகை தற்கொலை முயற்சி!

0
127

கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு படவாய்ப்புகள் குறைந்து நெட்டிசன்களின் அவமதிப்புக்கு ஆளான அமெரிக்க நடிகை கான்ஸ்டன்ஸ் வூ (Constance Wu) தற்கொலைக்கு முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

40 வயதான நடிகை 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட தமது தொலைக்காட்சித் தொடர்களை மீண்டும் புதுப்பித்து அதில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகளை இழந்த அவர் சமூக ஊடகத்தில் வரவே தயங்கியதாகக் கூறினார்.

இதனால் வாழவே பிடிக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்று நண்பர்களால் காப்பாற்றப்பட்டதாக தமது டிவிட்டர் பதிவில் கான்ஸ்டன்ஸ் வூ (Constance Wu) கூறியுள்ளார்.