புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்கள் நாளை ஏற்றுக்கொள்ளல் நடவடிக்கை

0
126

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை (19) முன்னெடுக்கப்படவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இடம் பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய ஜனதிபதி தெரிவுக்கான வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளும் நடவடிக்கை | Acceptance Of Nomination Papers

இதன் படி எதிர் வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெருமா ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.