உக்ரைனின் டினிப்ரோ நகரம் மீது ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் : 3 பேர் பலி, 15 பேர் காயம்

0
340

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ரஷ்யா வின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.

ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் டினிப்ரோ நகரின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அப்பிராந்திய ஆளுநர் வாலன்டின் ரெனிசென்கோ கூறினார்.

இதுகுறித்து அந்த நகர ஆளுநர் மேலும் கூறுகையில்,

” ஏவுகணைகள் டினிப்ரோ நகரில் உள்ள தொழில்துறை ஆலை மற்றும் அதற்கு அடுத்துள்ள பரபரப்பான தெரு மீது தாக்கியது. ரஷ்ய தாக்குதல் மூன்று பேரின் உயிரை பறித்தது. மேலும் 15 பேர் காயமடைந்தனர். அழிவின் அளவை நாங்கள் தீர்மானிக்கின்றோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.