ரணில் மக்களிடமிருந்து சிறந்த பாடத்தை கற்பார் – மக்கள் விடுதலை முன்னணி

0
76

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடமிருந்து சிறந்த பாடத்தினை கற்றுக்கொள்ள போகின்றார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரவசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஆர்பாட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்பினர் ஆதரவளித்துள்ளதோடு, அதனை தடுத்து நிறுத்த பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மகிந்தவின் பாதுகாப்பிற்காக ஐக்கிய தேசிய கட்சியினை ரணில் விக்ரமசிங்க மறந்து செயற்படுவதாகவும், மகிந்தவின் பாதுகாப்பிற்காக ரணிலும், ரணிலின் பாதுகாப்பிற்காக மகிந்தவும் செயற்படுவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித கொலைகளையும், வளங்களை சூரையாடுவதனையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க தற்போது செயற்படுகின்ற விதத்தினால் மக்கள் விடுதலை முன்னணி அவரை ஏற்றுக்கொள்ளாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.