பள்ளத்தில் விழுந்த குட்டியை காப்பாற்ற தவியாய் தவித்த தாய் யானை!

0
139

தாய்லாந்தில் வனப்பகுதிக்கு அருகே தொட்டிக்குள் விழுந்த தனது குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் யானை மனஅழுத்தத்தால் மூர்ச்சையானது.

1 வயது மதிக்கத்தக்க அந்த குட்டியானை தாய்யானையுடன் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தது.

பள்ளத்தில் விழுந்த குட்டியை காப்பாற்ற தவியாய் தவித்த தாய் யானை! Video | The Mother Elephant Was Desperate To Save The Cub

குட்டியை காப்பாற்ற முயன்ற தாய்யானை குழிக்குள் இறங்க முயன்ற போது மூர்ச்சையானது. அப்போது குட்டியானையின் பிளிறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வனத்துறையினர் தாய்யானையையும் குட்டியானையையும் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

இதன்போது மன அழுத்தத்தால் மூர்ச்சையாகி கிடந்த யானைக்கு முதலுதவி அளித்து நினைவு திரும்ப செய்தனர். அதன் பின்னர் அந்த யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.