யாரும் எதிர்பார்க்காத முடிவு: அடுத்த ஜனாதிபதி, பிரதமர் இவர்களா?

0
750

இலங்கையில் புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவில் அனைத்துக் தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.Vigneswaran) தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (16-07-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிப்பதற்கு தயாராகியுள்ளனர்.

எதிர்க்கட்சி சார்பில் ஜானதிபதியாக டலஸ் அழகப்பெருமவையும் (Dullas Alahapperuma), பிரதமராக சஜித் பிரேமதாசவையும் போட்டியிட வைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியாக ரணில் இருந்தால், பிரதமராக சஜித் இருக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதில் குழப்பமான நிலை காணப்படுகிறது.

தமிழ்க் கட்சிகளை பொறுத்தவரையில் எமது மக்களின் நலன்கள், மற்றும் இனப்பிரச்சினை தொடர்பில் கரிசனையுடன் செயற்படுவதற்கு யார் முன் வருகிறார்களோ அவர்களுக்கு தான் ஆதரவு வழங்குவதாக இருக்கும். இப்போது வரை நாம் முடிவு எடுக்கவில்லை.

73 வருடமாக நாம் எமது தனித்துவத்தை பாதுகாக்க போராடி வருகின்றோம். ஆதரவு கொடுக்கும் விடயத்தில் அனைத்துக் தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக இருப்போம் என நம்புகின்றோம் என்றார்.